Header image alt text

இலங்கையின் தேயிலை மற்றும் விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, அந்த நாட்டுப் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளில், ஒருவகை பூச்சியினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read more

இரண்டாம் கட்டமாக 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும், வேட்புமனு கையேற்புக்கான காலம், எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம், எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Read more

தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாயகம் திரும்பியுள்ள அகதிகளில் 21 வயதைப் பூர்த்தி செய்த, தமிழகத்தில் பிறந்தவர்களுக்கான இலங்கை குடியுரிமையைப் பெறுவதற்கு அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக Read more

மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் (Najib bin Tun Abdul Razak) நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் அவர், ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளார். இதன்போது விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திகள் என்பன தொடர்பில் இரு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறியானி விஜேவிக்கிரமவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மக்கள் ஐக்கிய முன்னணியில் இருந்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, பொதுஜன ஐக்கிய முன்னணியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Read more

நாட்டு மக்கள் கண்ணியமாக வாழ்வதற்காக தாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றவுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ராகுல் காந்தி உறுதிபூண்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு உண்மையான கருத்து சுதந்திரம் கிடைக்கவில்லை என அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி இன்று பதவியேற்றுக்கொண்டார். Read more

1200 மெகா வோட் கொள்ளளவைக் கொண்ட இரண்டு அனல்மின் உற்பத்தி நிலையங்களை திருகோணமலை மற்றும் நுரைச்சோலையில் நிர்மாணிப்பதற்கான அனுமதி கோரி, அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம மற்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஒன்றிணைந்த அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளனர். அந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய, 600 மெகாவோட் கொள்ளளவைக் கொண்ட அனல்மின் நிலையமொன்றை திருகோணமலையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. Read more

Indonesia Earthquake

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கை விடுத்ததால் அங்கு மக்கள் பதற்றத்தில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கமானது இந்தோனேஷியாவின் ஜாவா தீவை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.47 மணியளவில் தாக்கியுள்ளதாகவும் இது 6.5 ரிச்சடர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read more

அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களில் 4 பேர் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

எஞ்சிய 25 பேரையும் 10 ஆயிரம் ரூபா வீதம் ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையிலும் செல்ல நீதவான் அனுமதியளித்தார். கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி தங்காலை குடாவெல்ல கடற்பகுதியில் இருந்து இவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

காலை 7.30க்கு பாடசாலை ஆரம்பிக்கப்படுவதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தய்யா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more