Header image alt text

“காணாமலாக்கப்பட்டோர், இராணுவ முகாம்கள், காடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, அவர்களின் உறவினர்கள் என்னிடம் கூறியதுக்கமைய, நான் அவர்களை தேடிப்பார்த்தேன்.

ஆனால் அவர்கள் எங்கும் இல்லை. எனவே அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்க வேண்டுமாக இருந்தால், அதனையும் அரசாங்கம் என்ற வகையில் நிச்சயமாகச் செய்வோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
Read more

மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலுடன், அங்குலானைப் பகுதியில் வைத்து லொறி ஒன்று மோதியதால் ரயில் மிதிபலகையில் பயணத்த நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 4.55 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் இருவரின் நிலை கவaலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களுள் சீனாவைச் சேர்ந்தப் பெண்ணொருவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் தனங்கிளப்பு – மறவன்புலவு வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.தி.விமலதாஸ் என்பவரை ஆதரித்து

நேற்று முன்தினம் அங்கு இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின்போது புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வட்டாரங்களின் வேட்பாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை நிகழ்வுகள் யாழ். காரைநகர்ப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது,

புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், பிரதேச வட்டாரங்களின் வேட்பாளர்களும் கலந்துகொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்கள். இதில் கட்சி ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்திருந்த ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதியும், அந்நாட்டின் நிர்மாணத்துறை அமைச்சரும்,

இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவருமான வடாரு டெகெசிடா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து வாக்குமூலங்களை பெற்றதையடுத்து, Read more

யாழ். கோப்பாய் பகுதியில் சிறுமி ஒருவர் நேற்று ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தபோது கழுத்தில் ஊஞ்சல் கயிறு இறுகியதால் சுவாசத்தடை ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 9வயதுடைய சிவநேசன் அக்சயனி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அக்சனியாவை நித்திரை செய்ய வைத்துவிட்டு பெற்றோர் சந்தைக்கு சென்றுள்ளனர். சந்தையிலிருந்து திரும்பி வருகையில் குறித்த சிறுமி கட்டிலில் காணப்படாமையை தொடரந்து பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது கழுத்து பகுதி இறுகியநிலையில் ஊஞ்சலில் காணப்பட்டுள்ளார். Read more

நீண்டகாலத்திற்கு பின்னர் கொழும்பு – கோட்டையில் இருந்து பண்டாரவளை வரை கடந்த 29 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த பெட்ரிக் நோர்த் என்ற நீராவி புகையிரதம் நான்கு நாள் வெற்றிகரமான பயணத்தை முடித்து கொண்டு நேற்றுமாலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இரண்டு நீராவி இயந்திரங்களை கொண்ட இந்த புகையிரதத்தில் ஜேர்மன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் பயணம் செய்தனர். Read more