Header image alt text

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை மிரட்டியதாகக் கூறப்படும் இலங்கை பிரிகேடியரை, அரசாங்கம் அவரது பணிகளில் இருந்து உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சுதந்திர தினத்தன்று இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் லண்டன் இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது. இதன்போது, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கழுத்தை வெட்டுவதாக இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ சைகை செய்தமை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. Read more

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பரப்புரைகள் யாவும், நாளை புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உள்ளிட்ட 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே அன்றையதினம் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் இடம்பெறவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more

மானஸ் தீவில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏதிலிகள் சிலர், பப்புவா நியு கினி நாட்டில் இருந்தும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீவு மூடப்பட்டதை அடுத்து, அங்கிருந்த ஏதிலிகள் பப்புவா நியுகினியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களில் சிலரை பப்புவா நியுகினியில் இருந்தும் அகற்றவிருப்பதாக அவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. Read more

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண சபையின் உறுப்பினராக இருந்த றயிஸ் ராஜினமா செய்து கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். Read more

மலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம் மற்றும் அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் எதிர்வரும் 15 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமின் வீட்டை நேற்றிரவு சுற்றிவளைத்த மாலைதீவு பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதுடன் இன்று அதிகாலை அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். Read more

படையினரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்த யாழ். பொன்னாலை பருத்தித்துறை வீதி விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சேவைகளும் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990 ஆம் அண்டு முதல் மேற்படி வீதி உள்ளிட்ட பல பிரதேசங்கள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயங்காக இருந்து வந்திருந்தன. ஆயினும் கடந்த அரசிலும் தற்பொதைய அரசிலும் அங்கு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்களும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். Read more