Header image alt text

கிளிநொச்சியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கிவரும் ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 15 மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஷாப் நிறுவன முகாமையாளார் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஷாப் நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கும் ஜப்பானி நாட்டின் இலங்கைப் பிரதிநிதி செல்வி நிறோசா வெல்கம, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஷாப் நிறுவனத்தின் பளை அவலுவலம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் பகுதிகளை பார்வையிட்டார். Read more

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி, மார்ச் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் ஷைட் அல்ஹ_சைன் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். Read more

யாழ் மயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைகான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.

நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ் காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். Read more

நாட்டின் மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வாக நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பிரதேசங்களுக்கு செயற்கை மழையை பொழிவிப்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக

மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் மின்சாரத்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார். Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் மேலதிக பட்டியலில் கிடைத்த ஆசனங்களுக்காக பெயரிடப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் வாரமளவில் தனக்கு கையளிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முழு பொறுப்பையும் குறித்த கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் ஏற்க வேண்டும் என அதன் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மூதூர் கிளிவெட்டி பாலத்திற்கு கீழிருந்து 10 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 40 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த கிரேனெற் லோன்சர் ரக சிறிய குண்டுகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நேற்று இந்த குண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குண்டு செயலிழப்பு பிரிவுக்கு வழங்கிய தகவலை அடுத்து அதிகாரிகள் விரைந்து குண்டுகளை செயலிழப்பு செய்துள்ளனர். Read more

சுமார் 7.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் உபரியாக வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குடிமக்கள் அனைவருக்கும் சிறப்பு மேலதிக கொடுப்பனவு வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் சமீபத்தில் நிதி வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். அதில், அரசுக்கு சுமார் 7.6 அமெரிக்க டொலர் வருவாய் உபரியாக உள்ளதாக தெரிவித்தார். Read more