Header image alt text

நல்லாட்சி அரசாங்கம் நல்ல பல உறுதி மொழிகளை வழங்கிவிட்டு பின் அவை அனைத்தையும் கைவிடும் கொள்கையை பின்பற்றி வருவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஜெனிவா மாநாட்டில் முன்வைக்கவுள்ள அறிக்கை வெளியானதை அடுத்து, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உள்நாட்டு கொள்கையாக மாத்திரமின்றி சர்வதேச கொள்கையாகவும் இலங்கையரசு பின்பற்றுகிறது. குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் விடயத்திலும் இதே நிலமை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதனையே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையிலும் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றுபகல் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கனை குளத்தை சுற்றி 17,000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும் விவசாத்திற்கு பயன்படுத்தும் ராஜாங்கனை குளத்தை குடிநீர் போத்தல்களை தயாரிக்கும் சீனத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறியயே இந்ந ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்ல அனுமதியளித்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், மாதத்தில் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். Read more