Header image alt text

முல்லைத்தீவில் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய 4 உள்ளுராட்சி மன்றங்களுக்கே தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் இந்த பெயர் விபரங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளராக முதல் இரண்டு வருடங்களுக்கு செல்லையா பிரேமகாந்தும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு அருளானந்தம் தவக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உப தவிசாளராக முதல் இரண்டு வருடங்களுக்கு கனகசுந்தரசுவாமி ஜெனமேஜெயந்த்தும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சபாரெத்தினம் திருச்செல்வமும் பெயரிடப்பட்டுள்ளனர். அதுபோல், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக முதல் இரண்டு ஆண்டுகளும் கனகையா தவராசாவும், எஞ்சிய இரண்டு ஆண்டுகளுக்கு கமலநாயகம் விஜிந்தனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். Read more

உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள், எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அரசாங்க அச்சகத்துக்கு நேற்றையதினம் வழங்கியுள்ளது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8,325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடந்த சனிக்கிழமை (10.02.2018) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களே, எதிர்வரும் 6ஆம் திகதி, தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவையேற்பட்டால் சில உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவ எல்லை தொடர்பில் சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் சபாநாயகரை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு சபைக்கு இது தொடர்பில் அறிவிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் சபாநாயகரிடம் கோரியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பட்டுள்ளது. Read more

கொழும்பு புதுக்கடை (ஹல்ஸ்டோர்ப்) நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது. Read more

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு விஜயராம பகுதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த பின்னர் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கச் சென்றுள்ளனர். இதேவேளை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். Read more