Header image alt text

இலங்கையின் ஆதரவைப் பெறுவதற்காக, இலங்கையை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுபோன்ற தந்திரோபாயங்கள் தொடரும் என்றும், சீனா இதனைத் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவும் அடங்குகின்றார். ஏனைய இருவரும் உயர் பதவிகளை வகிக்கின்ற பொலிஸ் அதிகாரிகளாவர். கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவானால் இந்த பயணத்தடை உத்தரவு நேற்றிரவு பிறப்பிக்கப்பட்டது. Read more

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதிபத்மன் சுரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். Read more

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்கின்ற விசாரணைகளுக்கு அமைவாக கடந்த 01ம் திகதி அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. Read more