Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகள் யாழ். சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் பகுதிகளில் இன்று இடம்பெற்றது.

புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும், வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் இணைந்து தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் பகுதிகளில் அமைந்துள்ள சந்தைக் கட்டிடம், வீடுகள் மற்றும் கடைகடையாகச் சென்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.

Read more

புனரமைப்பே எமது மூச்சு-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பு, தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுத்த சமூக மீள் எழுச்சித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, அமைப்பின் வரலாறு நெடுகிலும் நிறைந்து காணப்படுகின்றன.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமான பின்பு, யுத்தத்தினால் சிதைவடைந்து காணப்பட்ட, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களில், தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை பாதுகாக்கவும் இயல்பு வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை கட்டியெழுப்பவும் புளொட் அமைப்பு தனது வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக தீவிரமாக செயற்பட்டிருந்தது. 

வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்திலும் பல தோழர்களின் இன்னுயிரைப் பலியாக்கி மக்களுக்கு தற்காலிகமாக கிட்டைத்திருந்த சமாதானச் சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தது. தமிழர்களின் அரசியற் பிரதிநிதித்துவம் பேரினவாதக் கட்சிகளிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக, இன்றல்ல, இற்றைக்கு 23 வருடங்களுக்கு முன்பே, தேர்தலில் கிடைக்கக்கூடிய ஆசனங்களுக்காக இன்று முண்டியடித்துக் கொண்டிருக்கும் எராளமான தமிழ் அரசியல்வாதிகளின் ஏளனப் பேச்சுக்களையும் எதிர்ப்புகளையும் புறம்தள்ளி திட்டமிட்டு செயற்பட்டிருந்தோம். Read more

பாடசாலைகள் மற்றும் சிறுவர் நிலையங்களில், சிறுவர்களுக்கு ஏற்படுத்தப்படும் உடல் ரீதியான தண்டனைகளை ஒழிப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாக தண்டனை ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பில் அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது. சர்வதேச பாடசாலைகளினுள் இடம்பெறும் சிறுவர் சித்திரவதை தொடர்பான பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்த வேலைத்திட்டம் சர்வதேச பாடசாலைகளிலும் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. Read more

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவுக்கு வந்துள்ளதுடன், இதுத்தொடர்பான விசேட வர்த்தமானி ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் இன்று இரவு 9 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஒருநாள் சேவையை துரிதப்படுத்த ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அரச தகவல் திணைக்களத்திற்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியனி குணதிலக தகவல் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்துவதற்கு ஆள்அடையாளத்தை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஆளடையாளத்தை உறுதி செய்யக்கூடிய 7 ஆவணங்களை குறிப்பிட்டுள்ளது. Read more

இறுதி யுத்த காலத்தில் புலிகளால் தங்கம் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பது தொடர்பாக கிடைத்த தகவலின்படி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு முள்ளியவளையில் நேற்று பாதுகாப்பு தரப்பினரால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல்படி பொலிஸாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட உத்தரவின்படி நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

பிரான்ஸின் பாரிஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உடலின் பல பாகங்களிலும் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் 25 வயது மதிக்கத்தக்கவரென தெரிவிக்கப்படுகின்றது. பாரிஸ் நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் கடமையாற்றிவந்த குறித்த இளைஞர் அவ் உணவகத்தின் நிலக்கீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அவரை இலங்கைக்கு அழைத்துவர விஷேட குழுவொன்று இன்றையதினம் டுபாய் நோக்கி பயணிக்கவுள்ளது.

டுபாய் விமான நிலையத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், அவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதுடன் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக 7 பேர் கொண்ட விஷேட குழுவொன்று டுபாய் நோக்கி இன்று பயணிக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.