Header image alt text

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொது வைத்தியசாலை வளவிற்குள் இன்றுகாலை சுமார் 9.00 மணியளவில் புதிய கட்டிட அஸ்திவார குழி தோண்டும் போது பழங்கால பீரங்கி ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுடெடுக்கப்பட்ட குறித்த பீரங்கியானது சுமார் 15 அடி நீளங்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு தொள்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக துறைமுகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.G.A.J. அமரவன்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள மில்லேனியம் ஷெல்லேன்ஜ் கோபரேஷன் என்றழைக்கப்படும் ஆஊஊ நிறுவனத்திடமிருந்து, இலங்கைக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்களிலான நிதி உதவி கிடைக்கப்பெறவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இலங்கைப் போக்குவரத்துத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி முகாமைத்துவப் பணிகளுக்காகவே, மேற்படி நிதியுதவி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் வழங்ககோரி நேற்றுக்காலை தொடக்கம் தற்கொலை செய்வதற்கான மருந்து போத்தல்களுடன் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்திவருகின்றனர்.

இதேபோல் மத்திய கல்வி அமைச்சின் முன்பாகவும் வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தால் அது தடைப்படுள்ளதாகத் தெரிவித்தே வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான தொண்டராசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பராராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ. சுமந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

கொழும்பு, ஆமர்வீதி கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 பேராக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கொழும்பு, கிராண்பாஸ் பபாபுள்ளே மாவத்தையில் தேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் பழமையான கட்டிடம் ஒன்று நேற்றுமாலை இடிந்து விழுந்துள்ளது. Read more

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் உலக இலங்கை பேரவை தெரிவித்துள்ளது.

கடந்த பெப்பரவரி 4ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திரதினக் கொண்டாட்டத்தின்போது, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரு பிள்ளைகளின் தாயான இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வட்டக்கச்சி 10 வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த குறித்த பெண்ணுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர். பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளியே சென்றுள்ளார். Read more