Header image alt text

இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வேறு நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹூஸைன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இலங்கை தொடர்பான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

இன்று அதிகாலை 02.00 மணி முதல் அதிகாலை 06.00 மணி வரை நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 504 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 720 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதி மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதவர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (23) மகிழடித்தீவு ஆற்றுப்பகுதியில் தரித்து நிற்கவைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களின் தோணிகளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more