Header image alt text

இந்த வருடத்தில் 35 நாட்களில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் மிதிப்பலகையில் பணித்தவர்கள் மற்றும் தொடருந்து கடவைகளில் வீதி மாறியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடரூந்து வீதிகளில் பயன்படுத்தும்போது அவதானத்துடன் இருக்க வேண்டும் என, தொடருந்து பாதுகாப்பு முகாமையாளர் அநுர பிரேமரத்ன கோரியுள்ளார். இதேவேளை, கடந்த வருடத்தில் பயணச்சீட்டின்றி தொடரூந்தில் பயணித்த 1295 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more

வவுனியா – நெடுங்கேணியில் நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்துப் பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் அவரது பையினை சோதனை மேற்கொண்டபோது ரி56 ரக துப்பாக்கியும் 611 ரவைகளையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தொவித்துள்ளனர்.

குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சிவசம்பு ஜெயரதன் என்பவரை சோதனையிட்ட போதே துப்பாக்கியும் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்ததோடு அவரது வீட்டையும் சோதனை செய்துள்ளனர்.

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

பயண்டர் (Bayandor), நக்டி (யேபான), டொன்ப் ((Tonb) என்ற போர் கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த மூன்று போர்க் கப்பல்களும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கவுள்ளன. Read more