Header image alt text

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொள்வதற்கு இலங்கை வந்திருந்த இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது பாரியாரும் இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சொபி ஆகியோரை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தனர்.

இலங்கையின் 70 வது சுதந்திர தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமது பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 339 ஆவது நாளை கடந்தது. இந்நிலையில், இன்று வரை தமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். Read more

இலங்கையின் எழுபதாவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் விமர்சையாக இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் அமைச்சர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

இதேவேளை, முப்படைகளின் பிரதானிகளும் காவல்துறைமா அதிபர், வெளிநாடுகளின் வெளிவிவகார தூதர்கள் உள்ளிட்ட பலரும் பங்குகொண்டிருந்தனர். இதேவேளை, பிரித்தானிய மகாராணியின் கனிஷ்ட புதல்வாரன இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சொபி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். Read more

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் ஊடாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரை இலங்கைக்கு அழைத்து வர விஷேட பொலிஸ் குழுவொன்று டுபாய் நோக்கி சென்றுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவினர் தெரிவிக்கின்றனர். இன்று காலை அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சந்தர்பத்தில் டுபாய் விமான நிலையத்தில் வைத்து உதயங்க வீரதுங்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி, மல்பாரவில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 544 சிறைக் கைதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிய குற்றங்கள் காரணமாக சிறையிலடைக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்டெனிய தெரிவித்தார். அநுராதபுரம், களுத்துறை, நீர்கொழும்பு மற்றும் மஹர உட்பட நாடு பூராகவுமுள்ள சிறைச்சாலைக் கைதிகள் சிலரை இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில், முச்சக்கரவண்டியொன்று மோதியதில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 7.35 மணியளவில் சீதுவ, ஈரியகஹலிந்த புகையிரதக் கடவையில் இடம்பெற்றுள்ளது. புகையிரதம் மோதியபோது, முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் பயணித்திருந்தனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நால்வரும் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் கடும் காயங்களுக்கு உள்ளான இரண்டு பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். Read more