Header image alt text

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெற்றுகொண்ட வாக்களிப்பு விகிதத்துக்கு அமைய அவர்கள் பெற்றுகொள்ள வேண்டிய உறுப்பினர்களுக்கு மேலதிகமாக அதிக தொகுதிகளை வெற்றிபெற்றதால் இம்முறை 364 உறுப்பினர்கள் மேலதிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் மேலதிக உறுப்பினர் ஒருவர் கூட தெரிவு செய்யப்படாத மாவட்டமாக கிளிநொச்சி இனங்காணப்பட்டுள்ளது. இதன்படி இம்முறை மொத்தமாக உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

விசா அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 4000 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு பொதுமன்னிப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் இம் மாதம் 22ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையிலேயே இவ்வாறு திருப்பியனுப்பி வைக்கப்பட்டனர். குவைத்தில் இது வரையில் சுமார் 15 ஆயிரத்து 700 க்கும் அதிகமான இலங்கையர்கள் விசா அனுமதிப் பத்திரமின்றி தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் வேலைவாய்ப்புக்களுக்காக குவைத் சென்றவர்களாக கருதப்படுகின்றனர். Read more

இலங்கை கடல்பரப்பில் உள்ள ‘தீடை’ பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுவரும் தலைமன்னார் கிராம மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் இடையூறை ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தீடை பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற ஒரு தொகுதி மீனவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பியதை கண்டித்து தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று மதியம் தலைமைன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
Read more

யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 365வது நாளாக தீர்வின்றி இரவு பகலாக தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை என நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்திருந்த நிலையிலும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது. Read more

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில், இராணுவத் தூதுவராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பதவி நீக்குமாறு வலியுறுத்தி, பிரித்தானிய அரசிடம் பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் உறவுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள், குறித்த இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், Read more

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளில் இணைந்து செயற்படுவதற்காக இலங்கை இராணுவத்தின் 12 ஆவது பாதுகாப்பு படையணியினர் இன்றுகாலை லெபனான் நோக்கி பயணித்துள்ளனர்.

உயர்மட்ட அதிகாரிகளும் 14 ஏனைய தரநிலை அதிகாரிகள் உட்பட மொத்தமாக 150 பேர் இந்த படையணியில் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே, 10 அதிகாரிகள் உட்பட்ட 140 பேர் அமைதிகாக்கும் பணிகளுக்காக லெபனானுக்கு சென்றுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி மற்றுமொரு குழு லெபனானுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை, நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவுப் பகுதியில், வீட்டு உரிமையாளருக்கும் வீட்டில் வாடகைக்கு இருந்தவருக்குமிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில், வீட்டு உரிமையாளர் கத்திக் குத்துக்கு இலக்காகி, இன்று காலை உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், சாம்பல்தீவு, 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணகசிங்கம் கேதீஸ்வரன் (41 வயது) என கூறப்படுகின்றது. சாம்பல்தீவு பாடசாலைக்கருகில் இருக்கின்ற வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு, வாடகைப் பணத்தை வாங்குவதற்காகச் சென்றபோது, வீட்டில் வாடகைக்கு இருந்தவருடன் தார்க்கம் ஏற்பட்டதையடுத்து, வீட்டு உரிமையாளர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். Read more

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் 26 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹ_சேன் ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர். இதன்­போது இவர்கள் இரு­வரும் இலங்கை தொடர்பில் சில விட­யங்­களை முன்­வைப்­பார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இம்­முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ள­துடன் இலங்கை குறித்து பல்­வேறு அறிக்­கை­களும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன. Read more

நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர் தீர்மானித்துள்ளார்கள்.

அதன்படி ஒரு புதிய பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டியுள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற பிரதி சபாநாயகரும் அமைச்சருமான திலங்க சுமதிபால நேற்றிரவு தெரிவித்துள்ளார். அதேபோல், தேசிய அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவைத் தெரியப்படுத்தியுள்ளதாக, சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவும் தெரிவித்துள்ளார். Read more

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு, ஏனைய சலுகைகள் எதனையும் வழங்காது, மாதாந்தக் கொடுப்பனவாக, 15 ஆயிரம் ரூபாயை மாத்திரம் வழங்குவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் சைக்கிள், தொலைபேசிக் கொடுப்பனவு, தொலைநகல் (பெக்ஸ்) இயந்திரங்கள் போன்றவை வழங்கப்படமாட்டாது என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். Read more