Header image alt text

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து, கண்டியிலிருந்து கொழும்பு வரை பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

”சர்வாதிகார நண்பர்களை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில், ஐ.தே.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. கண்டி – கெடம்பே விஹாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர், கெடம்பே மைதானத்திற்கு அருகில் பேரணி ஆரம்பமானது.

டுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியம், காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு அறியப்படுத்தியதற்கு அமைய, அவரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள அமெரிக்க ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனூடாக இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் பெரும் நன்மையை அடைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கை ஏற்றுமதியாளர்கள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜி.எஸ்.பீ. வரிச்சலுகை குறித்த ஆவணத்தில் கைச்சாத்திட்ட நிலையில், இலங்கை உட்பட 120 நாடுகள் இந்த சலுகையினை பெறவுள்ளன. Read more

உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் ஊடாக அடையாளம் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த திருத்தங்களை மேற்கொள்ளும்போது உரிய கால எல்லைக்கு அமைய செயற்படாவிட்டால், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் திகதி நிர்ணயம் இன்றி பிற்போடப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எனவே, கால எல்லை தொடர்பில் கொள்கை பகுப்பாய்வாளர்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ரோ ஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டதை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர். பலஸ்தீன – இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.

அவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர். போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதைத்தொடர்ந்து பலஸ்தீனர்களின் வசிப்பிடங்களை நோக்கி குண்டுவீசுயும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more

இந்­திய இரா­ணு­வத்தின் ஓய்வுநிலை புல­னாய்வு நிபு­ணரும் தெற்­கா­சி­யாவில் பயங்­க­ர­வாதம் மற்றும் கிளர்ச்­சி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் நீண்ட அனு­பவம் வாய்ந்த வர்­களுள் ஒரு­வரும் எழுத்­தா­ள­ரு­மான கேர்ணல் ஆர்.ஹரி­க­ரனை சென்­னையில் உள்ள அவ­ரு­டைய இல்­லத்தில் சந்­தித்­த­போது,

இலங்கை தீவில் காணப்­ப­டு­கின்ற வல்­லா­திக்க நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டிகள், பூகோள அர­சியல் நிலை­மைகள், இந்­திய அமை­திப்­ப­டையின் செயற்­பா­டுகள்,இலங்கை தேசிய இனப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் அவர் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வியின் முழு­வடிவம் வரு­மாறு; Read more

வெனிசுலா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையிலிருந்து தப்பிக்க சிலர் தீ வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வெனிசுலா நாட்டின் வாலன்சியா நகரில் உள்ள சிறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறை முழுவதும் தீ பரவியதில் 68 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். சிறையில் தீப்பிடித்த தகவல் பரவியதையடுத்து, கைதிகளின் உறவினர்கள் சிறை முன்பு திரண்டனர். அவர்களை கலவர தடுப்புப் பொலிஸார் தடுக்க முற்பட்டபோது, மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை பொலிஸார் விரட்டியடித்தனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கடையில், நேற்று இரவு நீண்டநேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக் கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு என்ற அடிப்படையில் எவ்வாறு எதிர்நோக்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

முன்னைநாள் உடுவில் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் அன்பு மனைவியும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தனின் தாயாருமான அமரர் தர்மலிங்கம் சரஸ்வதி அவர்களின் ஈமைக்கிரியைகள்

28.03.2018 புதன்கிழமை காலை 10.00மணிக்கு கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் கந்தரோடை சங்கம்புலவு மயானத்தில் நடைபெற்றது. அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, உள்ளுராட்சி சபை அங்கத்தவர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகததில் நேற்று மாலை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். Read more