Header image alt text

விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பேத்தாளையைச் சேர்ந்த கழக உறுப்பினர் சின்னத்தம்பி தியாகராசா (பவன்) என்பவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் கோரிக்கைக்கிணங்க,

கோழி வளர்ப்பினை மேற்கொள்வதற்காக ரூபா 26,000/=யினை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் சுவிஸ் தோழர்கள் சங்கர் மற்றும் தீபன் ஆகியோர் கடந்த 15.04.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழு உறுப்பினர்களான மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி), வவுணதீவு பிரதேச சபையின் உபதவிசாளர் பொ.செல்லத்துரை(கேசவன்), என்.ராகவன், கமலநாதன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் க.கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு திருமதி தியாகராசா சாந்தியிடம் வாழ்வாதார நிதியுதவியினை கையளித்திருந்தனர்.
Read more

ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி நேற்று இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஈரான் சபாநாயகர் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய குழு ஒன்றே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

வியட்நாமிற்கான விஜயத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 7.10 மணியளவில் ஈரானின் விஷேட விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த குழு 20 ஆம் திகதி வரையில் இலங்கையில் இருக்க உள்ளதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற தொடர்புகள் உள்ளிட்ட ஏனைய துறைசார் தொடர்புகளை அபிவிருத்தி செய்து கொள்வது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சுவிஸ் நெடுவீதியில், 40 பேருடன் பயணித்த குறித்த பேருந்து, சூரிச் வின்டெர்துர்-வுலபின்கென் பகுதியில் இரண்டு பாரவூர்திகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர காவற்துறையினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட பெண் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கின்றது. Read more

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின்பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் குறிப்பிட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரனைகளை மேற்கொண்ட போதே குறித்த சடலம் மன்னார் தோட்ட வெளியை சேர்ந்த 71 வயது நிரம்பிய காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) என்பவருடையது என தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read more

தனிப்பட்டவர்கள் எடுக்கும் சில முடிவுகளாலும் தனிப்பட்டவர்களுடைய கோபதாபங்களாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பலம் இழந்து நிற்பதுடன், பல இடங்களில் தென்னிலங்கை கட்சிகளினுடைய ஆதரவுடன் தப்பிபிழைக்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(புளொட்) தெரிவித்துள்ளது. Read more

ஐக்கிய தேசிய கட்சி பலமான தமிழ் கட்சி ஒன்று உருவாகுவதை விரும்புவதில்லை, அதையும் மீறி ஒரு தமிழ் கட்சி பலமாக உருவாகினால் அது தமக்கு சார்பாக இருக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி விரும்பும் என்ற உண்மையை கூறுவதற்கு நான் அச்சப்படவில்லை என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். Read more

மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி சந்திரமோகன் என்பவருக்குச் சொந்தமான கடல் மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் என்பன இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வாகரை பனிச்சங்கேணி கடற்கரையில் நேற்று  மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என அறியப்படுகின்றது. இது தொடர்பில் வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்களுடைய பூர்விக நிலமீட்புக்காக போராட்டம் மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு மக்கள் இன்று (14) 413 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து Read more

சிரியா மீதான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் (இந்தத் தாக்குதலில் பயன்படுத்திய) அறிவுக்கும் படை வலிமைக்கும் நன்றி கூறியுள்ளார். Read more