பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையர் ஒருவர் தொடர்பான வழக்கில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், ஐரோப்பிய நாடுகளில் அதிகபடியான ஏதிலிகள் உள்வாங்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பியாவைத் தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. பிரித்தானிய அரசாங்கத்தினால் ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் வழக்கை விசாரணை செய்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சகாய பாதுகாப்பு பெற முடியும் என்று அறிவித்திருந்தது. Read more