Header image alt text

சைட்டம் மருத்துவ பீட மாணவர்களுக்கு, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் மருத்துவ பட்டத்துக்கு சைட்டம் என பெயர்க் குறிப்பிடப்படுவதற்கு எதிராக, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, சைட்டம் மருத்துவ பீட பெற்றோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், இந்தவார இறுதிக்குள் நீதிமன்றில் அதனை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவ்அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது. இலங்கையுடனான சீனாவின் ஒத்துழைப்பு எவையும் சீனாவின் இராணுவ ஆதிக்கத்தினை இலங்கையில் நிலைநாட்டும் நோக்கத்துடனானது அல்ல என இலங்கைக்கான சீனத்தூதுவர் எச்.ஈ. செங் சேயுவான் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக வெளிவரும் வதந்திகள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன தூதுவருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன் போதே சீனத்தூதுவர் எச்.ஈ. செங் சேயுவான மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

தென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மட்டுவில் வளர்மதி பகுதியில் வசிக்கும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகரின் வீட்டுக்குள் வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். Read more

நுவரெலியா தலவாக்கலை – லிந்துலை சமூர்த்தி வலயத்தினால், ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ், சிங்கள புத்தாண்டு வைபவத்திற்கு புத்த பகவானின் உருவப்படம் பொறித்த சேலையை அணிந்து வந்திருந்த பெண்ணை வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

அக்கராபத்தனை பொலிஸ் பிரிவின் ஹோல்புறுக் பொல்மோர் தோட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த புத்தாண்டு வைபவம் நேற்று நடைபெற்றது. புத்தாண்டு வைபவத்தை ஏற்பாடு செய்திருந்த சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியின் மகள் இந்த சேலையை அணிந்து வந்திருந்ததாக வைபவத்தில் கலந்து கொண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். Read more

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை இலங்கையை வந்தடைந்தார்.

மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதியுடன் பயணித்த உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மருத்துவர், அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் அவரது பாரியார், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். Read more

உலகலாவிய ரீதியில் 199 நாடுகளுக்கு இடையிலான, கடவுச் சீட்டு தரப்படுத்தலுக்கு அமைய இலங்கை 94ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

39 புள்ளிகளைப் பெற்று பங்களாதேஷ், ஈரான் மற்றும் எரிடேரியா ஆகிய நாடுகளுடன் 94ஆவது இடத்தை இலங்கை கடவுச் சீட்டு பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த பட்டியலில், சிங்கப்பூர் 164 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 163 புள்ளிகளுடன் தென்கொரியா இரண்டாம் இடத்திலும், ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 162 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது. சட்ட ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவளித்து, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற ஆறு அமைச்சர்களுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சர்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான, 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. நீதிப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் வரையறையுடன் செயற்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் John J. Sullivan இனால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் 25 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் அல்லது அதன் முகவர்கள் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக பதிவாகியுள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more

அழிவடைந்துவரும் தொல்லியல் சின்னமாகிய மன்னார் அல்லிராணிக் கோட்டையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் – அரிப்பு கிராமத்திலுள்ள – அல்லிராணிக் கோட்டை தமிழர்களது பண்பாட்டு வரலாற்றிலும், புராதான வாணிப பண்பாட்டு வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த மையமாக உள்ளதாக தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தெரிவந்துள்ளது. Read more

ஐவர் உயிரிழந்ததோடு, பலர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த, ஹொரணை இறப்பர் தொழிற்சாலையின் சிரேஷ்ட ஆய்வுக்கூட கட்டுப்பாட்டாளர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை பொலிஸாரால் நேற்றைய தினம், திக்கெனபுர பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட 42 வயது சந்தேகநபரை, விளக்கமறியலில் வைக்குமாறு, ஹொரணை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more