Header image alt text

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எனினும் அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்த தடையுத்தரவு இடையூறாக அமையாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றையதினம் அனுமதி வழங்கியுள்ளது.

களனிப் பல்கலைக்கழகத்தின் கல்வியியலாளர்கள் சங்கம், அவுஸ்திரேலிவாவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க விடுத்திருந்த அழைப்பையடுத்து, இதற்கு அனுமதி வழங்கக் கோரி அவர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நீண்டகாலமாக ஏதிலிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், அச்சத்துடனான மனநிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.

அதன் சிரேஷ்ட உறுப்பினர் இந்திரிக்கா ரத்வத்த இதனைத் தெரிவித்துள்ளார். தமது 25 வருட பணிக்காலத்தில், பசுபிக் தீவுகளான நவுறு மட்டும் மானஸ் தீவுகளில் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமையைப் போன்று மோசமான நிலைமையை தாம் பார்த்ததில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

மட்டக்களப்பு மாநகரசபைக்கு மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்யும் சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். Read more

தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் சில உறுப்பினர்களை இழந்துள்ளோம், எனினும் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களுடன் தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். Read more

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.

பதவி விலகுவதற்கான தனது இராஜினாமா கடிதத்தை அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்க உள்ளதாக அவர் கூறினார். கட்சியின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் தனது செயலாளர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அவர் அறிவித்துள்ளார். Read more

அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரை அரசாங்கத்தில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் 33 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை பிரதமருக்கு கையளித்துள்ளனர். Read more

வடமராட்சி, வல்வெட்டிது;தறை கடற்கரையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்றுமாலை மீட்கப்பட்டதுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பர்மலையைச் சேர்ந்த 76 வயதுடைய துரைசிங்கம் அருந்தவம் என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் அவரும் மகளும் பேரப்பிள்ளைகளுமே இருந்தனர். நேற்றுகு; காலை 9 மணியளவில் மகள் வெளியில் சென்று வீடு திரும்பிய போது, தாயாரைக் காணவில்லை என தேடிவந்தனர். இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

கலிபோர்னியாவில் உள்ள YouTube தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பெண் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள YouTube தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு, குறித்த பெண் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்பெண் யார் என்ற தகவல் இதுவரை தெரியாத நிலையில், அவர் குறித்த தகவலை அமெரிக்க பொலிஸார் வெளியிட்டுள்ளனர். Read more