Header image alt text

வட மாகாணத்துக்கு தொடர்பில்லாத மக்கள் அங்கு குடியேற்றப்படுவது, ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம் என்று, வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண விவசாயத் திணைக்களம், மத்திய விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் “ஒன்றாய் எழுவோம், சிறுபோகத்தை வெல்வோம்” என்ற தொனிப்பொருளிலான விவசாய ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஒட்டுசுட்டானில் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read more

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான, யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் ஜனாதிபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கும் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். Read more

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜாலிய விக்ரமசூரியவின் பிணையாளர்களான அவரது மனைவி மற்றும் உறவினரை கைது செய்யவும் நீதிபதி பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். Read more

கடந்த காலத்தில் இந்தியாவில் இருந்து புகலிடம் கோரி வந்த யாழ் மாவட்ட மக்கள் தற்போது மீள்குடியேற்றத்திற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் புதிய பதிவுகளை மேற்கொண்டுவருகின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற புனர்நிர்மாண, சிறைச்சாலைகள் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு மீள்குடியேறயுள்ள மக்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் காணி கிளையில் யாழ் மாவட்ட செயலக மேலதிக செயலாளர் காணி எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. Read more

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்க முடியும் என வவுனியா பொலிஸார் மாணவர்களிடம் தெரிவித்தனர்.

வவுனியா வளாகத்தில் விகாரை அமைப்பதுக்கு சிங்கள மாணவர்கள் நேற்று முயற்சிகளை மேற்கொண்டபோது, வளாக நிர்வாகத்தினால் அம் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வளாகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பீடாதிபதிகள் விரிவுரையாளர்களுடன் சிங்கள மாணவர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். Read more

போலி ஆவணங்களைத் தயாரித்து சிங்கப்பூர் செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்- பருத்திதுறையைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞரின் பயணப்பொதியை பரிசோதித்த போது, அதில் சிங்கப்பூரிலிருந்து இங்கிலாந்து செல்வதற்கான விமான பயணச்சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் மத்தி பகுதியில் வசித்துவந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனை காணவில்லை என உறவினர்கள் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சுதந்திரபுரம் மத்தி 40 ஏக்கர் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சத்தியசீலன் கிருஜன் என்பவர் 22ம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள சிறிய தந்தையில் வீட்டில் உணவருந்திவிட்டு 2 மணியளவில் வீடு செல்வதாக தெரிவித்துவிட்டு சென்றவர் வீடு வந்து சேரவில்லை என தந்தையார் தெரிவித்தார். Read more

அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதோடு, மற்றுமொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் யாழ்.தென்மராட்சி ஏ 35 வீதியில் நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகாமையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மன்னார் வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்துள்ளனர். Read more

சிறீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று இரவு 08.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெற உள்ளதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும் போது சீமேந்தால் கட்டப்பட்ட சுவர் தென்பட்டதையடுத்து சந்தேகம் கொண்டு, அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற இராணுவத்தினர் குறித்த காணியில் இருப்பது விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி என்பதை உறுதி செய்துள்ளனர். Read more