Header image alt text

இலங்கைக்கு தேவையான சந்தர்ப்பங்களில் எல்லாம் உதவியளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங், இதனைத் தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தொட்டையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே பல்வேறு உதவிகளையும், முதலீட்டு வேலைத்திட்டங்களையும் வழங்கியுள்ளது. Read more

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய வருமான வரி சட்டத்தின் மூலம் 5 இலட்சம் பேர் வரி அறவீட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய வருமான வரி அறவீட்டின் மூலம் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் பணிபுரிபவர்களால் அனுப்பப்படுகின்ற பணம், மரண மற்றும் நற்பணி மன்றங்கள், மூத்த பிரஜைகளுக்கான சேமிப்புகள், சமய நிறுவனங்கள் என்பனவற்றின் மீதும் அசாதாரணமான முறையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. Read more

முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவுக்கு இன்று விஜயம் செய்த வடமாகாண சபையின் உறுப்பினர்கள், அங்கு இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், சட்டவிரோத விகாரை அமைக்கும் பணி, அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர். Read more

இலங்கையர் தொடர்பில், விதிக்கப்பட்டிருந்த புதிய சட்டத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு, சவூதி அரேபியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து சவூதிக்குச் செல்லும் பணியாளர்கள் வீசா பெறும்போது, அவர்களின் மனநிலை தொடர்பான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த புதிய சட்டத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சவூதியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

வடமாகாண அமைச்சர்கள் மீது உள்ளுர் பத்திரிகையால் முன்வைக்கப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பிரதம செயலாளர் ஊடாக விசாரணை நடத்துமாறு மாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர், முதலமைச்சருக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார். வடமாகாண அமைச்சர்கள் மீது மோசடிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று, மோசடிக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவியிலிருந்து விலகியிருந்தனர். Read more

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் மீனவர் ஒருவரை சடலமாக இன்றுகாலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மாரியம்மன்கோவில் வீதி மட்டக்களப்பைச் சேர்ந்த 58 வயதுடைய கணவதிப்பிள்ளை நாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மீனவர் வழமைபோல மீன்பிடிப்பதற்கு நேற்று இரவு சென்றுள்ள இவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர் இவரை தேடிய நிலையில் சம்பவதினமான இன்றுகாலை கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார். Read more

இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் 476 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமான உயிரிழப்புக்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களிலேயே இடம்பெற்றுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் விபத்துக்களில் பாதசாரிகள் 139 பேரும், பயணிகள் 70 பேரும் மற்றும் சாரதிகள் 39 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆளணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அந்த அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் முதலாம் திகதி முதல் காணாமல் போனோர் அலுவலகம், தற்காலிக கட்டிடம் ஒன்றில் இயங்க ஆரம்பித்துள்ளது. இந்த அலுவலகத்துக்கும், ஏனைய மாவட்ட ரீதியான அலுவலகங்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் மற்றும் மீளிடம்பெறாமை உறுதிசெய்யப்பட வேண்டும் என நம்புகின்றவர்களை விண்ணப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்தச் சட்டத்தில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தொடர்பில் தேடியறிவதற்கு, குழுவொன்றை நியமிப்பதற்கும் அந்தச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமைகள் தொடர்பில் கருத்துரைப்பதற்கும் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்குமான சர்வகட்சிக் கூட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுப்பதற்கு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெஃபரல்) தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறைமையின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் குளறுபடிகள், அந்த தேர்தல் முறைமையின் பிரகாரம், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின் ஏற்படக்கூடும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துகளைக் கேட்டறிவதற்கே, இந்த சர்வகட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதென, அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். Read more