இலங்கையில் இன்னமும் நில அபகரிப்புகள் தொடருமாயின், நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது என, ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வு, ஜெனீவாவில் நேற்றும் தொடர்ந்தது. மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹ_ஸைனின் அறிக்கையை, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கேற் கில்மோர் சமர்ப்பித்தார். ஐ.நாவுடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பை, இலங்கை வழங்கி வருகிறது எனவும், அதற்கான வரவேற்பை வழங்குவதாகவும், கில்மோர் குறிப்பிட்டார். ஆனால், அதன் பின்னரான அவரது அறிக்கை, இலங்கை மீதான விமர்சனங்களையே முழுமையாக வழங்கியது. Read more