Header image alt text

நல்லாட்சி அரசாங்கம் நல்ல பல உறுதி மொழிகளை வழங்கிவிட்டு பின் அவை அனைத்தையும் கைவிடும் கொள்கையை பின்பற்றி வருவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஜெனிவா மாநாட்டில் முன்வைக்கவுள்ள அறிக்கை வெளியானதை அடுத்து, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உள்நாட்டு கொள்கையாக மாத்திரமின்றி சர்வதேச கொள்கையாகவும் இலங்கையரசு பின்பற்றுகிறது. குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் விடயத்திலும் இதே நிலமை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதனையே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையிலும் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றுபகல் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கனை குளத்தை சுற்றி 17,000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும் விவசாத்திற்கு பயன்படுத்தும் ராஜாங்கனை குளத்தை குடிநீர் போத்தல்களை தயாரிக்கும் சீனத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறியயே இந்ந ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்ல அனுமதியளித்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், மாதத்தில் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். Read more

மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்காது அரசாங்கம் சர்வதிகாரப் போக்கில் புதிய அமைச்சு பதவிகளை வழங்கிமையை வன்மையாக கண்டிப்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இன்று (26) ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று  இடம்பெற்றது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் நாடளாவிய ரீதியில் முல்லைத்தீவு கிளிநொச்சியில் காணி விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு, இரணைதீவு, மன்னார் முள்ளிக்குளம், கொழும்பு, காலி, நீர்கொழும்பு உள்ளிட்ட தென்பகுதி மக்கள் மற்றும் கிழக்கு மாகாண மக்கள் என எல்லா இடங்களிலிருந்தும் ஒன்றுதிரண்ட மக்கள் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் பொதுச்சந்தைக்கு முன்பாக இருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் நிறைவு செய்தனர் Read more

முல்லைத்தீவு செல்வபுரம், வட்டுவாகல் ஆகிய இரு கிராமங்களுக்கு எல்லையில் காணப்படும் சுடலையில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் மற்றும் அரச அதிகாரிகள் மதில் கட்ட முற்பட்டபோது அதனை செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தடுத்து அரச அதிகாரிகளோடு முரன்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். Read more

புதிய அமைச்சரவை மாற்றம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை மாற்றங்களின் விபரம் வருமாறு,

அமைச்சர்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் Read more

விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அமைச்சுக்களிலும் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

இன்றையதினம் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். Read more

சிவனொளிபாதமலையை தரிசிப்பதற்காக சென்ற 20 பேரிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. Read more

இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வேறு நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹூஸைன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இலங்கை தொடர்பான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more