Header image alt text

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) அமைப்பு, தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுத்த சமூக மீள் எழுச்சித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, அமைப்பின் வரலாறு நெடுகிலும் நிறைந்து காணப்படுகின்றன.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமான பின்பு, யுத்தத்தினால் சிதைவடைந்து காணப்பட்ட, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களில், தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை பாதுகாக்கவும் இயல்பு வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை கட்டியெழுப்பவும் புளொட் அமைப்பு தனது வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக தீவிரமாக செயற்பட்டிருந்தது.
வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்திலும் பல தோழர்களின் இன்னுயிரைப் பலியாக்கி மக்களுக்கு தற்காலிகமாக கிட்டைத்திருந்த சமாதானச் சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தது.
Read more

இந்திய மத்திய அரசாங்கத்தின் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 150 கோடி ரூபாவை ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டத்தை நேற்று இந்திய பாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்தார். இந்த வரவு செலவு திட்ட உரையின் போது இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்படுவதாக அவர் கூறினார். இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டு 75 கோடி ரூபாவாக இருந்ததுடன் அது இம்முறை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read more

தேர்தல் முறைப்பாடுகளை தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவிற்கு இன்றுமுதல் குறுந் தகவல் (SMS) மூலம் அனுப்பி வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் குறித்த முறைப்பாடுகளை பின்வரும் படிமுறைகளின் ஊடாக குறுந் தகவல்களாக அனுப்பி வைக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி EC <இடைவெளி, EV <இடைவெளி, குறித்த மாவட்டம் <இடைவெளி, முறைப்பாட்டை டைப் செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும். Read more

இம் முறை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த எந்தவொரு வேட்பாளரும் தேர்தலுக்கு முன்னர் இராஜினாமா செய்ய முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் ஒருவரின் மரணத்தின்போது அல்லது தேர்தலின் பின்னர் மேற்கொள்ளப்படும் இராஜினாமாவின் போது கட்சியின் செயலாளர் வேட்பாளர் பட்டியலில் உள்ள பிரிதொரு நபரை நியமிக்க அதிகாரம் உள்ளது என்றார் அவர்.

கியூப புரட்சியாளர் பிடல் காஸ்டோவின் மூத்த மகன் டயஸ் பலார்ட்(வயது 68). மனவிரக்தியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் அணுசக்தி இயற்பியலாளராக கடமையாற்றிய டயஸ் பலார்ட், கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபா அறிவியல் அகாடமியின் துணைத்தலைவராகவும் பணியாற்றி வந்தார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டயஸ் பலார்ட், மன அழுத்தத்திலிருந்து விடுபடாத காரணத்தினால் விரக்தியடைந்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

குவைத்தில் இலங்கையைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போது அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியாவதற்கு அல்லது பதிவு செய்துக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக் காலம் அமுலாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி வரையில் இந்த பொதுமன்னிப்பு காலம் அமுலில் இருக்கும். Read more

மாலைத்தீவு உயர் நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மற்றும் எட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் அவருக்கு 13 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. மேலும், நஷீட்டின் ஆட்சிகாலத்தில் 2012 ஆம் ஆண்டு நீதிபதியொருவரை தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என குற்றவியல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நடுவர் குழாம் தீர்ப்பளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் வாகனத்துடன் மோட்டார் சைக்களொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் வவுனியா – கனகராயன்குளம், புதுக்குளம் சந்தியில் நேற்றுமாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து யாழில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, திரும்பி கொழும்பு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அவரின் பாதுகாப்பிற்காக வந்த கார் ஒன்று புதுக்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more