Header image alt text

Sri Lanka Turkey

இலங்கை மற்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கெமால் கஹர்மன் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பு பாதுகாப்பு பிரதானியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கீமெல் கஹர்மன் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தில் பங்கேற்பக வந்துள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் கேர்ணல் கெமால் கஹர்மன் ஆகியோருக்கிடையில் பரஸ்பர நலன்கள் குறித்து பேசப்பட்டதுடன் இருவரும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறினர். கேர்ணல் கெமால் கஹர்மன் துருக்கி இராணுவத்தின் அனுபவமிக்க இராணுவ அதிகாரி என்பதுடன் அல்பேனியா, ஜோர்ஜியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்.

அரசியல் நோக்கங்களுக்காக சிறுவர்களைப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென அனைத்து அரசியல் கட்சிகளிடமும், சுயாதீன குழுக்களிடமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் பல்வேறு செயற்பாடுகளுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மரினி தி லிவேரா தெரிவித்துள்ளார். Read more

வாக்காளர்களுக்கு கிடைத்துள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பன தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது குறித்து உடன் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலமாகவோவும், தொலைபேசி ஊடாகவும் கிராம சேவை அதிகாரிக்கோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். Read more

இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான நீண்டகால உறவுகள் குறித்து பிரித்தானிய இளவரசர் எட்வரட் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரது பாரியாரான இளவரசி ஸோஃபி ஆகியோர் நேற்று மதியம் இலங்கையை வந்தடைந்தனர்.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் விசேட அதிதிகளாக கலந்துகொள்வதற்காக அவர்களது இந்த விஜயம் அமைந்துள்ளது. அவர்கள் பெப்ரவரி 5ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளனர். Read more

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த சிறார்களுக்கான இலங்கையின் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி நேற்று முன்தினம் 158 சிறார்களுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள இந்தியாவிற்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகரத்தினால் இந்த பிறப்புச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன. Read more

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளும் பேசித் தீர்க்க வேண்டும் என்று, இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வகீஸ்வரா தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை நீண்டகாலமாக தொடர்கிறது. இந்தவிடயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்க்க வேண்டும். Read more

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் நேற்றுக்காலை மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதான பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோதே குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். Read more

நுவரெலியா மாவட்டத்தின் ராகல பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியெற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராகல, லிடெல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களின் 107 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதவிர காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ருக்சைட், செனரத்புரா, ஹால்கன்ஓய பிரதேசங்களைச் சேர்ந்த 41 குடும்பங்களின் சுமார் 200 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more