Header image alt text

எமக்கு இறு­தி­யாக கிடைத்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்­தி­ரி ­பால சிறி­சேன ஆகிய இரண்டு ஜனா­தி­ப­தி­களும் கொழுக்­கட்­டையும், மோத­கமும் போன்­ற­வர்கள். உருவம் வேறாக இருந்­தாலும் அவர்­களின் செயற்­பா­டுகள் ஒன்­றா­கவே இருக்­கின்­றன என கிளி­நொச்சி மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் இணைப்­பாளர் லீலா­வதி தெரிவித்­துள்ளார்.

கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போராட்டம் மேற்­கொள்ளும் இடத்தில் நேற்­றைய தினம் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து உரை­யாற்­றி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில், Read more

யாழ். குடாநாட்டைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர், யுவதியர் 50பேர் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு கடந்த 15ம் திகதி யாழ். இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த 50 பேரில். முன்னாள் போராளிகளும் அடங்குகின்றனர். சேர்த்துக்கொள்ளப்பட்ட 50 பேரும் இராணுவப் பணி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என தெரியவருகிறது. இந்த 50 பேருக்கும் மாதம் தலா 40ஆயிரம் ரூபா சம்பளத்துடன், உணவு, போக்குவரத்து, தங்குமிட, மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய செல்வரத்தினம் சுரேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வீட்டிலிருந்து உறவினரொருவரது திருமணத்திற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். Read more

இந்த வருடத்தில் 35 நாட்களில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் மிதிப்பலகையில் பணித்தவர்கள் மற்றும் தொடருந்து கடவைகளில் வீதி மாறியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடரூந்து வீதிகளில் பயன்படுத்தும்போது அவதானத்துடன் இருக்க வேண்டும் என, தொடருந்து பாதுகாப்பு முகாமையாளர் அநுர பிரேமரத்ன கோரியுள்ளார். இதேவேளை, கடந்த வருடத்தில் பயணச்சீட்டின்றி தொடரூந்தில் பயணித்த 1295 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more

வவுனியா – நெடுங்கேணியில் நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்துப் பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் அவரது பையினை சோதனை மேற்கொண்டபோது ரி56 ரக துப்பாக்கியும் 611 ரவைகளையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தொவித்துள்ளனர்.

குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சிவசம்பு ஜெயரதன் என்பவரை சோதனையிட்ட போதே துப்பாக்கியும் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்ததோடு அவரது வீட்டையும் சோதனை செய்துள்ளனர்.

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

பயண்டர் (Bayandor), நக்டி (யேபான), டொன்ப் ((Tonb) என்ற போர் கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த மூன்று போர்க் கப்பல்களும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கவுள்ளன. Read more

முல்லைத்தீவில் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய 4 உள்ளுராட்சி மன்றங்களுக்கே தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் இந்த பெயர் விபரங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளராக முதல் இரண்டு வருடங்களுக்கு செல்லையா பிரேமகாந்தும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு அருளானந்தம் தவக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உப தவிசாளராக முதல் இரண்டு வருடங்களுக்கு கனகசுந்தரசுவாமி ஜெனமேஜெயந்த்தும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சபாரெத்தினம் திருச்செல்வமும் பெயரிடப்பட்டுள்ளனர். அதுபோல், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக முதல் இரண்டு ஆண்டுகளும் கனகையா தவராசாவும், எஞ்சிய இரண்டு ஆண்டுகளுக்கு கமலநாயகம் விஜிந்தனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். Read more

உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள், எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அரசாங்க அச்சகத்துக்கு நேற்றையதினம் வழங்கியுள்ளது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8,325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடந்த சனிக்கிழமை (10.02.2018) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களே, எதிர்வரும் 6ஆம் திகதி, தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவையேற்பட்டால் சில உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவ எல்லை தொடர்பில் சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் சபாநாயகரை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு சபைக்கு இது தொடர்பில் அறிவிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் சபாநாயகரிடம் கோரியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பட்டுள்ளது. Read more

கொழும்பு புதுக்கடை (ஹல்ஸ்டோர்ப்) நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது. Read more