மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இன்று பிற்பகல் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு லவ் லேனிலுள்ள கிழக்கு மாகாண ஆளுனரின் விடுதிக் கட்டிடத்திற்கு அருகாமையிலுள்ள வாகனத்தரிப்பிட வளவிற்குள் இருந்தே குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இங்கு சுத்தம் செய்து கொண்டிருந்தபோது இந்தக் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Read more
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறித்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கும், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிகமாக 100 பொலிஸாரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளோம்.
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.