பலாலி விமானத்தள காணி கையேற்பு தொடர்பில் சிவில் விமான சேவை திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
பிரதமர் கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, இதற்கான காணி கையகப்படுத்தல் தொடர்பில் உரிய நிறுவனத்துடன் பேசித் தீர்க்குமாறு கூறியதன் காரணத்தினாலேயே முதலமைச்சரினால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்திற்காக 1950 ஆம் ஆண்டு சிவில் விமான சேவை திணைக்களத்தினால் 141.61 ஹெக்டெயர் காணி முதலில் கையேற்கப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Read more
வெளிநாடுகளில் பணியில் ஈடுபடும் இலங்கையர்களில் வருடமொன்றுக்கு 600 பேர் அளவில் மரணிப்பதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள் இருவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மன்னார் சதொச விற்பனை கட்டுமான பணியின் போது வளாகத்தினுள் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அகழும் பணிகள் இன்று 41வது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காணாமல் போனோர் அலுவலகம் விடயத்தில், பொதுமக்கள் தங்களது சுயமான நிலைப்பாட்டை மேற்கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என்று தேசிய சமாதான செயலகம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பொது நூலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், தேசிய கல்வி புத்தகக் கண்காட்சி நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் குறித்த கண்காட்சி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.