இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில், நேரடி விமான சேவையினை ஆரம்பிக்க இரு நாட்டு பிரதமர்களும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
வியட்நாமில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதமர் கிரையன் சூன் புக் ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இந்த விமான சேவைக் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. Read more
வட மாகாண சபையின் ஆயுட் காலம் ஒக்டோபர் 25ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாபகாணசபையின் இறுதி அமர்வு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெற உள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், கட்சியின் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும்,
நீர்கொழும்பு மேற்கு கடற் பகுதியில் சட்டவிரோத குடியேறிகள் 88 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 09 இலங்கையர்கள் அந்த நாட்டில் இருந்து இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ். கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெறும் ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தினூடாக வியட்நாமின், ஹெனொய் நகரத்தைச் சென்றடைந்தார்.
இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 1968 முறைப்பாடுகள் தமது ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது. அந்த முறைப்பாடுகளில் 1264 முறைப்பாடுகளை விசாரணைக்காக தெரிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி கூறியுள்ளார்.
இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டம் சம்பந்தமாக தான் வருத்தமடைவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் தெரிவித்துள்ளார்.
இந்துக் கோவில்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலியைத் தடை செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.