Header image alt text

மட்டக்களப்பு – பாசிக்குடா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸா தெரிவித்தனர்.

கருங்காலிச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும், தேவராசா கோகிலதாஸன் என்பவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more

கடந்த சில நாட்களிற்கு முன் பொலிஸாரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட 14 வயது மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதி வேண்டி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மாற்று, பள்ளி மாணவரின் இரத்தம் குடிக்கும் இரத்தக் காட்டேறியே ஊரை விட்டு வெளியேற்று, சட்டத்தை மீறாதே சண்டித்தனம் செய்யாதே, முன்னை நாள் போராளிகள் என்ன உன் அடிமைகளா போன்ற வாசகங்களை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். Read more