மன்னாரில் தொடர்சியாக அகழ்வு பணிகள், மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறபடுத்தும் பணிகள் என பல்வேறு கட்டமாக செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

தொடர்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றது. இன்று 69 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. விசேட சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் இன்று அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. அகழ்வு பணிகளுக்கு அமைவாக தற்போதைய நிலையில் 126 மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மீட்கப்படாத அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணி இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

அத்துடன் குறித்த புதைகுழி பகுதியானது மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி மூடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.