தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில் பிரான்ஸில் இன்று அஞ்சலி நிகழ்வொன்று நடைபெற்றது.
இன்று 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணியளவில் பிரான்ஸின் 21 Rue Villot, 93120 la courneuve என்னுமிடத்தில் தோழர் கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் பிரான்ஸ் கிளை இணைப்பாளர் தோழர் மார்டடீன் பெர்ணான்டோ உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more
யாழ். கோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கமைய புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அங்கு சென்று வாசிகசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.
யாழ். அச்சுவேலி அரசடி முதலாம் ஒழுங்கை இன்று (21.07.2019) காலை 10.00 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ். அச்சுவேலி வடக்கு விக்னேஸ்வரா கிளை வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை (21.07.2019) 9.30மணியளவில் நடைபெற்றது.
யாழ். ஏழாலை மேற்கு இலங்கையர்கோன் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (20.07.2019) 6.15மணியளவில் இடம்பெற்றது.
யாழ். சுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் வீதியுடன் இணைகின்ற வீதியான பழைய பாடசாலை வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (20.07.2019) 5.45மணியளவில் இடம்பெற்றது.
யாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் பொன்விழாவும் கட்டடத் திறப்பு விழாவும் நேற்று (20.07.2019) சனிக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் அம்பாள் சனசமூக நிலைய முன்றலில் அம்பாள் சனசமூக நிலையத் தலைவர் சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.