முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு (03.10.2019) இன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சார்பில் அதன் மத்தியகுழு உறுப்பினர் தோழர். வே. சிவபாலசுப்ரமணியம் கலந்துகொண்டிருந்தார். கடந்த ஆண்டில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் நிதியுதவியில், மாணவர்கள் அனைவருக்கும் தேவையான கற்றல் உபகரணங்களும் சீருடைத் துணிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்ததோடு, இப் பாடசாலையினைச் சுற்றி காணப்பட்ட பற்றைக் காடுகள் நீக்கப்பட்டு பாடசாலையின் பயன்பாட்டுக்குரிய நிலம் அதிகரிக்க வழி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Read more
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையமானது சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதற்கு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையில் இன்று துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் 4 கிலோ ரி.என்.ரி வெடிமருந்துகளுடன் ஒருவரை கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.