Header image alt text

தேர்தல் தொடர்பான பெனர்கள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் தனியாகவோ, வாகனங்கள் மூலமாகவோ பேரணியில் ஈடுபடுவது இன்று முதல் தடைசெய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அருகாமையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வது தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கமைய இன்று முதல் பெனர்கள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் தனியாகவோ, வாகனங்கள் மூலமாகவோ பேரணியில் ஈடுபடுவது தடைசெய்யப்படுவதாக அவர் கூறினார். Read more

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள பிரதேசத்தில் கோயில் அல்லது பௌத்த விகாரை அமைப்பதோ அல்லது திருத்த வேலைகள் செய்வதற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை முடிவில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் வெந்நீர் ஊற்று பகுதிக்கு விஜயம் செய்பவர்களுக்கு மட்டும் டிக்கட் விற்பனை செய்யவும் தொல்பொருள் திணைக்களத்திற்கு அனுமதியும் நீதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. Read more

லங்கா சமசமாஜ கட்சியின் முன்னாள் தலைவரும், இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் நீதிமன்ற மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் அமைச்சருமான சட்டத்தரணி பெடீ வீரகோன் இன்று காலமானார்.

அவரின் இறுதிக்கிரியைகள் இம்மாதம் 10 ஆம் திகதி பொரளை மயானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அன்னாரின் பூதவுடல் பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தை, இலக்கம் 121 இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை நள்ளிரவு 12.00 மணியுடன் ஊவா மாகாணத்தின் 6ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைகின்றது.

கடந்த 5 வருடத்தில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை முன்னெடுத்துள்ளனர். சஷிந்திர ராஜபக்ஷ, ஹரின் பெர்னான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமை வகித்திருந்தார்.

வவுனியா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தமையால் பதட்டமான சூழ்நியொன்று ஏற்பட்டிருந்தது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று மதியம் குறித்த நபர் மற்றும் 37 வயதான பெண் ஒருவரிற்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் தீயில் எரிந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தநிலையில் காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்ததுடன், குறித்த இளைஞரும் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார். Read more

ஜனாதிபதி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது. அதனடிப்படையில் 35 பேர் 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலிற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் அதில் 35 பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். Read more

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் தொடர்பாக முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மற்றும் மீளாய்வு வழக்குகள் தொடர்பிலேயே மேல்முறையீட்டு வழக்கு அந்த வழக்கினுடைய முதலாவது தரப்பினராகிய புத்த பிக்கு மரணம் அடைந்த காரணத்தினால் அந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. Read more

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகியுள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகன போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை 9 மணிமுதல் 11 மணிவரையான காலத்தில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியும். Read more

கறைபடாத கரங்கள் துடிப்பான தலைவன் தன் தந்தை வழியில் பயணிக்கும் தூர நோக்கு கொண்ட இலங்கையின் அனைத்து மக்களுடைய இதய துடிப்பையும் உணர்ந்த ஒரே ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது சஜித் பிரேமதாச மட்டுமே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் நேற்றுக்காலை ஹட்டனில் இடம்பெற்றது. Read more