Header image alt text

மலர்வு 02.03.1933 உதிர்வு 08.10.2019

யாழ். மயிலிட்டி கெத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனியை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஜெர்மன் கிளைத் தோழர் சந்திரன் அவர்களின் தந்தையாருமான வேலுப்பிள்ளை கந்தசாமி (ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்கள் (08.10.2019) செவ்வாய்க்கிழமை ஜெர்மனியில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிக்கு உதவி செய்தல், கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குதல் அல்லது மௌனமாக இருத்தல் ஆகிய தீர்மானங்களை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்க இருந்ததாகவும், Read more

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பிணையில் விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு உயர்நீதிமன்றினால் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பினை இன்று வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார். Read more

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக .முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முள்ளியவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2 மணியளவில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். Read more

திருகோணமலை – மட்கோ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் குழந்தையானது ரயில் வீதிக்கு சென்ற போது பிள்ளையை பிடிப்பதற்காக அவரது மனைவி ரயில் தண்டவாளத்துக்கு அருகே சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது மனைவியையும் மகளையும் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் ரயில் தண்டவாளத்துக்கு சென்றவேளை ரயில் மோதியுள்ளது. Read more

இங்கிலாந்தின் பின்னர் நகரில் கடந்த மார்ச் மாதம் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னர் நகரில் உள்ள மார்ஷ் வீதியில் கடந்த மார்ச் மாதம் 24ம் தகிதி ரவி கதர்குமார் என்ற இலங்கையர் கொலைசெய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக அலெக்சாண்டர் ஸ்ரெபன் கன் என்ற 31 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. Read more

லண்டன் – லூட்டோன் விமான நிலையத்தில் கடந்த தினங்களில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றுடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த நான்கு பேரும் கடன் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் பெண் ஒருவர் ஏலவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏனைய 3 ஆண்களும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர். Read more

யாழ்ப்பாணம் முகமாலை மற்றும் பளை பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக அமெரிக்க அரச பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், நிலக்கண்ணி அகற்றும் நிறுவனம் ஒன்று இந்தப் பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பலாலி பிரதேசங்களில் இராணுவத்தினரும், எல்ரிரிஈ அமைப்பினரும், பாதுகாப்பு வலயங்களை அமைத்திருந்ததனால் அந்தப் பிரதேசங்களில் அதிகளவிலான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக கண்ணிவெடி அகற்றும் அமைப்பு தெரிவித்துள்ளது. Read more

மாகாண சபைகள், பொதுமக்கள் பிரதிநிதிகளால் அன்றி தனி ஒருவரின் அதிகாரத்தின் கீழ் நீண்ட காலமாக நிலவுவது, சர்வாதிகாரத்திற்கான படிக்கல்லாக அமையும் எனவும், இதனால் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது நாட்டின் அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

புலிகளின் சீருடை என சந்தேகிக்கப்படும் ஆடைகளுடன் வவுனியாவில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – புதியபேருந்து நிலையத்தில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து புலிகளின் சீருடையை ஒத்த ஆடையும், புலிச்சின்னம் பொறிக்கப்பட்டதாக கூறப்படும் தொப்பி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. கைதானவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.