Header image alt text

வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை ஒருபோதும் அகற்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதிகளில் இருந்தாலும் பௌத்த புரதான சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அவை எந்த இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் இருந்தாலும் அவற்றுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளனர். Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் நேற்று மாலை சந்தித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் கமல் குணரத்ன, அலரிமரிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின்போது, பிரதமரும் பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு குறித்து ஒரு  கலந்துரையாடலை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமான சேவை சங்கத்துடன் கலந்துரையாடி இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த விமான சேவைகளை மீள ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர். சமல் ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில், நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். Read more

வவுணதீவில் பயங்கரவாதிகளால் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று இரத்ததான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இன்றுகாலை 8 மணியளவில் காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் இந்த இரத்ததான நிகழ்வு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பமானது. Read more

மேல்மாகாணத்தில் யாசகம் செய்வோரை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் வழங்கிய அறிவுறுத்தலின்கீழ் மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காலிமுகத்திடல் மற்றும் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து சுமார் 700 யாசகர்கள் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர். Read more

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் சகல பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பெயர், பாடவிதானங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், 1911 என்ற துரித தொலைப்பேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். Read more

அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் குழும பணிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜெயசுந்தர இது குறித்து அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய, மேற்படி விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு அவசியமான ஆவணங்களை சுவிஸ் தூரகத்திடமிருந்து, பொலிஸ் தலைமையகம் கோரியுள்ளது. Read more

ஏழாவது ´வன மித்ரா சக்தி போர் பயிற்சி´ நடவடிக்கைகள் நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இடம்பெறவுள்ளது.

இந்த பயிற்சி நடவடிக்கைகள் இந்தியாவின் புனேவில் உள்ள குமாவோன் இராணுவ முகாமில் ஆரம்பமாகவுள்ளது. இதன்மூலம் இலங்கை இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்புகளை பலப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more