Header image alt text

யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் அவர் மருத்துவப்பிரிவின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரியவந்துள்ளது. Read more

ரெலோவின் சாதாரண அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

ரெலோவின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான தமது தீர்மானம் அடங்கிய கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தாவிடம் கையளித்துள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதற்கு, ரெலோவினால் சிவாஜிலிங்கத்திற்கு இன்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. Read more

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம், வாக்காளர்கள் தங்களின் வீடுகளில் இருந்து வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அஞ்சல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிகள், எதிர்வரும் 9 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளுக்காக 9 ஆயிரம் அஞ்சல் ஊழியகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more

கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முறிகண்டியில் முன்னெடுத்திருந்தார்.

கடந்த 23ம் திகதி முறிகண்டி அரை ஏக்கர் பகுதியில் வீட்டில் வைத்து குறித்த குடும்பஸ்தர் தாக்கப்பட்டதாகவும் இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சந்தேகநபர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்டது. Read more

தெஹிவளை கடற்கரையை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தக ஒன்றுகூடல் களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் சட்டவிரோத போதை பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more