Header image alt text

இந்தோனேஷியாவின் நியூகினியா தீவில் 6.1 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் தென்கிழக்கே 311 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குறித்த தீவிலேயே இந்த நிலநடுக்கம் இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது. நில நடுகம் காரணமாக உண்டான சேத விபரங்கள் இதுவரை வெளிவராத நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் டெங்கு நோய் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதார திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் 305 பேர் டெங்கு நோய் தாக்கம் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். Read more

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதிசயம் அமைப்பின் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம் கிராமசேவையாளர் அலுவலக மண்டபத்தில் நாளை காலை 9 மணி முதல் இம்மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ள வரையறுக்கப்பட்ட அனுமதிகளே உள்ளதால் உங்கள் பதிவுகளை கிராம சேவையாளர் காரியத்திலோ, தமிழ் விருட்ச அலுவலகத்திலோ அல்லது 0770879830 தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொள்ள முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில், நேற்று அதிகாலை வீசிய சுழல் காற்று காரணமாக, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய சுழல் காற்று காரணமாக, கறுவாக்கேணியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் கடைத் தொகுதியை பராமரிக்கும் பாடசாலை வீதி, சுங்கான்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகம் (வயது 62) என்பர் உயிரிழந்துள்ளார். Read more

கொழும்பு பொது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக் கைதி ஒருவர் தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது.

வைத்திய பரிசோதனைக்கு குறித்தக் கைதி அழைத்து வரப்பட்டிருந்தபோது, சிறைச்சாலை பொலிஸார் மீது மிளகாய்த் தூள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு குறித்த கைதி தப்பிக்க முயற்சித்துள்ளார். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லாவுக்குமிடையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பங்களாதேஷ் அரசு சார்பில், உயர்ஸ்தானிகர், புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது புதிய ஜனாதிபதிக்கு தூதுவர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிற்ஸ், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ, அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் அன்ரனி ரென்சுலி ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதுடன், Read more

இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன நேற்றுக் காலை ஶ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் இராணுவ அதிகாரிகளுடன் அலுவலகத்துக்கு வருகை தந்த பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அவர்கள் பௌத்த மகா சங்க தேரர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டதுடன் சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கினையும் ஏற்றி வைத்தார். Read more

கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

அவர் கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று அமைச்சின் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இதேவேளை, நீதிமன்றம் மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று பிற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடிதம் மூலம் அவர் இந்த வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும், சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்காகாகவும், இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம்)