Header image alt text

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிலுள்ள தட்டுவன் கொட்டி பகுதியில் நேற்று பிற்பகல் 11 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட சட்டவிரோத களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 9 பெண்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொட பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 27 கிராம் கஞ்சா வைத்திருந்த நால்வரையும், 200 கிராம் ஹசிஷ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இரண்டு சர்வதேச உதவி மாநாடுகளை நடத்த எதிர்பார்ப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவ்வாறான உதவி மாநாடுகளை நடத்தி அதனூடாக அந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றுமுற்பகல் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முற்பகல் 8.50 மணியளவில் இந்த மின்சார தடை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பிரதான மின்கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை பிற்ஸ் எயார் (Fits Air)) விமான நிறுவனத்தின் விமானம் முதலாவதாக கொழும்பு இரத்தமலானை விமான நிலையத்தில் இருந்து சென்றது.

இந்த விமான சேவைக்கு உட்பட்ட ஊழியர்கள் சிலர் இந்த விமானத்தின் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர். இதன் பின்னர் இந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. சென்னையில் இருந்து மீண்டும் பிற்ஸ் எயார் விமான சேவையின் முதலாவது விமானம் இலங்கைக்கு வந்தமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காகும். Read more

வாக்காளர்களில் 3 இலட்சம் பேருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

ஆட்பதிவு திணைக்களம் இது தொடர்பாக தெரிவிக்கையில் விண்ணப்பித்தவர்கள் கிராம உத்தியோகத்தர் மூலம் இந்த அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். தேசிய அடையாள அட்டைகளை விண்ணப்பித்த நபர்களுக்கு மாத்திரம் இதன் மூலம் வாக்களிப்பதற்கு முடியும். Read more

நீண்ட வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும். அதற்கமைய, கொழும்பு, கோட்டையில் இருந்து இரவு 7.35 பணத்ததை ஆரம்பிக்கும் விசேட ரயில், அதிகாலை 4.33 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும். Read more

ஒரு நாட்டில் ஒருமித்த நாட்டில் இன, மத, மொழி, கட்சி பேதமின்றி சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி ஒரே குடையின் கீழ் ஒருதாய் மக்களாக ஒரு சட்டத்தின் கீழ் வாழக்கூடிய ஒரு எதிர்கால அரசாங்கத்தை நான் உருவாக்குவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாச தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி, அடிப்படை வசதிகள், சுத்தமான குடிநீர் அதேபோன்று கலாசாரம் போன்ற விடயங்கள் கலாசார மண்டபம் அமைத்தல், வீட்டுப் பிரச்சினை, காணிப்பிரச்சினை சுற்றுலாத்துறையுடன் உள்ள பிரச்சினையை தீர்த்து வைத்தல், Read more