Header image alt text

இலங்கைக்கு மேலே தூசுத் துகள்கள் அதிகரித்தைமைக்கான காரணத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை கோரியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கே.எச்.முத்குடஆராய்ச்சி கூறுகையில், மேற்படி தூசுத் துகள்கள் எவ்வாறு நாட்டுக்குள் வந்துள்ளது என்பதை கண்டறியுமாறு வானிலை ஆராய்ச்சி மையம் எம்மிடம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. Read more

இலங்கையுடன் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் பெல்ஜியத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளின் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக 6 பேர் அடங்கிய குறித்த குழு நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த குழு சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு சீகிரிய, கண்டி, காலி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 3083 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்றையதினம் வரையில் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2959 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 25 முறைப்பாடுகளும் மற்றும் 99 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. Read more

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சம்மி குமாரரத்ன உள்ளிட்ட எழுவருக்கு சட்டமா அதிபர் ஹோமாகம மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கமைய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சம்மி குமாரரத்ன, பிரபோத ஶ்ரீவர்தன, டீ கே ராஜபக்ச, டிலன்ஜன் உபசேன, எஸ் கே உலுகெதர, ரவிந்திர ரூபசேன, ஹேமசந்திர பெரோ ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அதிகரித்துள்ளமையினால், சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த நிலைமை காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார். இந்தியாவின் புதுடில்லியில் ஏற்பட்டுள்ள வளி மாசடைவு, தற்போது இலங்கையை பாதித்துள்ளது என சந்தேகிப்பதாக தேசிய கட்டட ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் இணைந்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

கினிகத்தேன பொலிஸ் பிரிவில் பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்தினை வழிமறித்து சிலர் தடை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன்போது பின்னால் வந்த வாகனத்தில் இருந்த மெய்ப்பாதுகாவலர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைவாக 5 நாடுகளைச் சேர்ந்த 14 கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கை வரவிருப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (அரசாங்க தகவல் திணைக்களம்)

Millennium Challenge Corporation உடன்படிக்கை தொடர்பில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பாரிய அளவில் பரிமாறப்படும் முறையைக் கண்காணிப்பதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் முடிந்துள்ளது.

ஒரு தரப்பினரால் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு சமூக இணையத்தளங்களை பயன்படுத்துவோருக்கு சிரமங்கள் ஏற்படுத்தப்படுவதனால் சமூக இணையத்தளங்களை பயன்பாடுத்துவோருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. Read more