Header image alt text

(திருமலைநவம்)

சிங்கள அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானவர்கள் அதிகாரப்பகிர்வு விடயத்தில் கடும் போக்கு கொண்டவர்கள். இந்நிலை தோன்றுவதற்கு அண்மைக்கால இனவாத சக்திகளின் ஊடுருவலே காரணம். இதன்காரணமாகவே தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு இன்னும் தீhவு காண முடியவில்லை. வழமையான தலைவர்கள்போல் சஜித் செயற்படமாட்டார் என்ற நம்பிக்கையின் காரணமாகவே எமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இது குறித்து வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல் பின்வருமாறு, Read more

மரண தண்டனை கைதியொருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு சிறைக் கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீது ஏறியே குறித்த கைதிகள் இருவரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ராஜகிரிய ரோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் வசித்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கோட்டை முதலிகே மாவத்தையில் உள்ள ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் குடியிருப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்ப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் 47 உந்துருளிகள் என்பன சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read more

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 31 வயதான இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெராட் மேரி அகிலா என்ற 9 மாத குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் கணவர் மனைவி மற்றும் ஒரு குழந்தை அடங்கலாக வாழ்ந்து வந்துள்ளனர். Read more

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும், 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சர்வதேசம் மிக உன்னிப்பாக அவதானிக்கும் சூழலில் இம்முறை தேர்தல் நடைபெறுகிறது. முதலில் நடைபெறுவது ஜனாதிபதித் தேர்தலா, மாகாண சபைத் தேர்தலா? என்ற சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றம் தீர்வைப் பெற்றுக் கொடுத்ததையடுத்து, எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகன தரிப்பிடத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீர் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு 1, முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வாகன தரிப்பிடத்தில் இந்த தீ பரவல் ஏற்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். தீயை அணைப்பதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். Read more

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வாரம் ஒன்றுக்கு 3 தடவைகள் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக குறித்த விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். Read more

வவுனியா வடக்கு கனகராஜன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் தர்மிலன் யாழ் பல்கலைக்கழக மாணவன் நேற்றுக் காலை முதல் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் பல்வேறு தேடுதலின் பின்னர் இன்று முற்பகல் குறித்த மாணவன் காட்டிற்குள்ளிருந்த மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Read more

அனைத்து மாகாணங்களின் ஆளுனர்களும் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி தமது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஆளுனர்களுடன் இடம்பெறும் இறுதி சந்திப்பு இதுவாகும். Read more

அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ள மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

குறித்த மனுக்களை விசாரணை செய்வதற்கு ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹார செயற்படவுள்ளார். Read more