Header image alt text

யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் வீட்டை அடித்து நொறுக்கி வீட்டின் முன்பாக இருந்த வாகனத்தையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சித்த மருத்துவர் ஒருவரின் வீட்டிலேயே இச் சம்பவம் நேற்றுஇரவு இடம்பெற்றுள்ளது. மேற்படி வீட்டுகாரர்கள் அவசர தேவையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ள நிலையில் வீட்டில் யாருமில்லாத்தால் வீட்டிற்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுள்ளது. Read more

நாடளாவிய ரீதியில் இதுவரை சகல பொலிஸ் நிலையங்களிலும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 60 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவை தொடர்பில் 57 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், Read more

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் 1060 கைத்துப்பாக்கி ரவைகளை தாம் கைப்பற்றியதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த கைத்துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட ரவைகள் மிக பழையதாக காணப்பட்டதுடன் மேலதிக பரிசோதனைக்காக கடற்டை தலமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதி நவீன வசதிகளுடன் சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டே பெலவத்தை அகுரேங்கொடயில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், முப்படைத் தளபதிகளுடன், பாதுகாப்பு துறை பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். ஜனாதிபதிக்கு கௌரவம் வழங்கும் வகையில், 21 கௌரவ வேட்டுகள் தீர்க்கப்பட்டன. Read more

தமிழ்நாடு – திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 46 கைதிகளில் 20 பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் இலங்கை தமிழர்கள் 38 பேர் உட்பட பங்களாதேஷ், சீனா, பல்கேரியா முதலான நாடுகளை சேர்ந்த 70 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விஸா காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருந்தமை, போலி கடவுச்சீட்டில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்தமை, போதைப்பொருள் கடத்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Read more

வவுனியாவில், டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில் திருநாவற்குளத்தைச் சேர்ந்த 9வயது சிறுமியான சுரேஸ் பிரியங்கா உயிரிழந்தமைக்கு போக்குவரத்து பொலிஸாரின் அசமந்தமே காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் வவுனியா, ஹொரவப்பொத்தான வீதி இலுப்பையடியில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கர வண்டியில் சென்ற தாய் மற்றும் சிறுமியை மோதியதில் டிப்பர் வாகனத்தின் சில்லுக்குள் சிக்கிய சிறுமி தலை சிதறி சம்பவ இடத்தியேயே உயிரிழந்தார். Read more

வங்காள விரிகுடாவிற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் அதிக வலுவான சூறாவளியாக மாறி வடக்கு நோக்கி வடமேல் திசையூடாக பங்களாதேஷ் கரையை அண்மிக்கவுள்ளது. Read more

அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றையதினம் திறந்து வைக்கப்படவுள்ளது.

கடற்படை மற்றும் வான்படை உள்ளிட்ட முப்படையின் தலைமையகங்களையும் ஒரே இடத்தில் பேணும் நோக்குடன், பெலவத்தை அகுரேங்கொடயில் 77 ஏக்கர் காணியில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. 53.3 மில்லியன் ரூபாய் இதற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் வளிமண்டலத்தில் கடந்த தினங்களில் தூசு துகள்கள் அதிகரித்திருந்தன. எனினும் இது சாதாரண மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலானது இல்லை என்று, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தின் வளி தர குறியீடு குறித்த ஆய்வின் பல்வேறு விடயங்களை மையப்படுத்தி, ஆய்வு செய்திருப்பதாகவும் குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது. வடக்கில் இருந்து வீசிய காற்றின் ஊடாக குறித்த தூசி துகள்கள் இலங்கையின் வளிமண்டலத்தில் கலந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது. Read more

இலங்கை மின்சார சபை இயந்திர, சிவில் மற்றும் மின் அதிகாரிகள் அடையாள வேலைநிறுத்தமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, கடந்த 4ம் திகதி இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வவுனியா வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more