Header image alt text

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ தற்போதும் அமெரிக்க குடிமகன் என்று பரவிவரும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். Read more

கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த கோரி அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 13ம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

13ம் திகதிக்கு பின்னரும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டால் சட்ட ஆலோசனைக்கு அமைய அதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். Read more

இம்முறை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் நான்காயிரம் பேரை ஈடுபடுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களாக என்ப்ரல் அமைப்பின் கண்காணிப்பாளர்கள் 46 பேர் செயற்படவுள்ளதாக அவ்வமைப்பு கூறியுள்ளது.

யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் கவனயீர்பு ஊர்வலமும் ஆர்பாட்ட போராட்டத்தில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணி மட்டக்களப்பு, திருமலை வீதியில் ஆரம்பித்து நகர் மணிக் கூட்டு கோபுரம் வரை சென்று அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more

வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனைத்து வாக்காளர்களும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில் வாக்களிப்பின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். Read more

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதோர் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அவற்றை பெறமுடியும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, ஆள் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிகமாக 3 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (அரசாங்க தகவல் திணைக்களம்)

இந்த நாட்டில் எவ்வாறெல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அவ்வாறு கொள்ளையடித்து நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக்கிய ராஜபக்ஷவினரிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க புத்தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். Read more