Header image alt text

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2540 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2425 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகளும் மற்றும் 92 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 147 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்திருப்பதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபன தலைவர் கல்யாணி லியனகே தெரிவித்துள்ளார்.

உத்தேச ஜனாதிபதி தேர்தலுக்காக இம்முறை 1 கோடி 70 இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று வாக்காளர்கள் அட்டையை விநியோகிக்கும் விசேட தினமாக பிரகடகப்படுத்தப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். Read more

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே சின்னம் தொடர்பிலும் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பிலும் மக்கள் மத்தியில் குழப்பம் அல்லது தெளிவின்மை காணப்படுகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளித்த அவர், ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 1981 – 5ம் இலக்க சட்டத்தில் வாக்களிப்பது தொடர்பிலும், விருப்பு வாக்கு தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் ஒருவர் யாரேனும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பினால் அந்த வேட்பாளரது சின்னத்திற்கு அருகில் புள்ளடியிட வேண்டும். Read more

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டினை புகைப்படம் எடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவர்கள் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி பகிர்ந்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மற்றொரு தவணைக் கடன் தொகையொன்று இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் தொடர்பில் குறித்த நிதியம் மேற்கொண்ட ஆறாவது மதிப்பீட்டிற்கு பிறகே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவானது 164 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை கப் வாகனம் அல்லது டபிள் கப் வாகனத்திற்காக அறவிடப்பட்ட சொகுசு வரி நேற்று முதல் நீக்கப்படுகின்றது. நேற்று முதல் சம்பந்தப்பட்ட வரி சொகுசு மோட்டார் வாகனம் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு மாத்திரமே அறவிடப்படும்.

சொகுசு வரி கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த தினத்திற்கு பின்னர் டுநவவநச ழக உசநனவை கடன் சான்று ஆவணம் மேற்கொள்ளப்பட்டு இறக்குமதி செய்யப்படும் அனைத்து சொகுசு வாகனங்களுக்கும் புதிய வரிமுறை ஏற்புடையதாகும். Read more