ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் பிரதமராக நியனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ மத அனுஷ்டான நிகழ்வுகளுடன் அலரிமாளிகையில் தனது கடமை பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான உறுப்பினர்கள் 15 பேர் தமக்கான அமைச்சரவை நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டனர். Read more