Header image alt text

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார். இந்திய பிரமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் அவர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார். அத்துடன் இந்திய பிரதமருடன், ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்தைகளிலும் ஈடுடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2015 ஆம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட பிரிவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குறித்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் குறித்த பிரிவிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. Read more

இம்மாதம் 25 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இலங்கை ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று தகவல் கிடைத்ததும், இந்த விடயம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்பதற்கு பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையை சுமுகமாகவும், நிறுவப்பட்ட நடைமுறையின் பிரகாரமும் முன்னெடுப்பதற்காக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முழுமையான ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. Read more

யாழ். பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து 2 கிலோ வெடிமருந்து மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை குறித்த வெடிமருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவப் புலனாய்வாலருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது Read more

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான

சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டாவது பிரதிவாதியின்றி விளக்கத்தை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து நாளை குற்றப்பத்திரம் வாசிக்கப்படவுள்ளது. Read more

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் அரசாங்கத்தால் நடத்தப்படும் புதிய பாதுகாப்பு மற்றும் நகர அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைய கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் யாசகம் பெறுபவர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் இதற்கான ஆலோசனைகளும் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கில் யாசகம் பெறுவோர் உள்ளனர். Read more

புதிய 20 அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்றுபிற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,

எஸ்.எம் மொஹமட் – சுற்றாடல் மற்றும் விமான சேவைகள்
ஆர்.டபுள்யூ.ஆர் பேமசிறி – வீதி மற்றும் நெடுஞ்சாலைகள்
ஜே.ஜே ரத்னசிறி – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம்
ரவிந்திர ஹேவாவித்தாரண – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் Read more

இந்தியாவின் பிரபல விஸ்தாரா எயார் லயன்ஸ் நிறுவனமானது இலங்கைக்கான புதிய விமான சேவை ஆரம்பித்துள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த முழு சேவைகளை காவிச் செல்லும், டாடா சகோதரர்கள் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு முயற்சியுடன் விஸ்தாரா நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. Read more