Header image alt text

புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளித்திருப்பது மிக முக்கியமான விடயமாகும்.

நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பயணிப்பதே எமது இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்கு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். Read more

யாழ். வலி தென்மேற்கு பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை உப அலுவலகத்தில் அமைந்துள்ள நூலகத்தில் உதவி நூலகராகக் கடமையாற்றும் பெண் ஊழியரான திருமதி கௌதமி தனுசீலன் என்பவர் கடந்த சனிக்கிழமையன்று (26.10.2019) கடமை நேரத்தின்போது நூலகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபரொருவரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதலில் தலையில் காயமடைந்த அவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். இதனைக் கண்டித்து வலி தென்மேற்கு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை காரியாலயத்திற்கு முன்பாக ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் போதையில் வந்து தாக்குதல் நடத்திய நபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், தாம் சுமுகமாக கடமையாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறும் செயலாளரைக் கோரியுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் சோதனைக்காக 2 ரோபோக்கள் இன்று முதல் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த இரண்டு ரோபோக்களும் சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். வரலாற்றில் முதற்தடவையாக போதைப்பொருள் சோதனைக்காக ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. நேற்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் போன தபால் மூல வாக்களிப்போர் இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரையிலான காலப்பகுதியில் தமது அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆறு இலட்சத்து 59 ஆயிரத்து 30 பேர் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு 3 கட்டங்களின் கீழ் இடம்பெறுகின்றது. Read more

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும் நிகழ்வில் அரசியல் கூட்டணி அமைக்கும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், புதிய ஜனநாயக முன்னணி பிரசாரத்தில் இணைந்துக்கொண்டுள்ள கட்சிகளும், சிவில் சமூக குழுக்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றிருந்தார்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தனவினால் சுபசாதனை திட்டத்தின் கீழ் 21, 54 மற்றும் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 30 செயற்கை உறுப்புக்கள் இப்பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த செயற்கை உறுப்புக்கள் கண்டி ஊனமுற்றோர் மையத்தின் அனுசரணையில் இராணுவத்தினரது பூரண பங்களிப்புடன் விநியோகிக்கப்பட்டன. வன்னி சிவில் தொடர்பாடல் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஜானக ரத்வத்த, கண்டி ஊனமுற்றோர் மையத்துடன் தொடர்பினை கொண்டு 2 மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க இந்த செயற்கை உறுப்புக்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. Read more

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கிடையிலான வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விமான சேவையானது தினசரி விமான சேவையாக இடம்பெறவுள்ளதுடன் பயண நேரமானது 32 முதல் 50 நிமிடங்களுக்குள் இருக்கும். டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மொஹமட் சஹ்ரான் ஹசீமின் பின்தொடர்பவர்களுடையது என கருதப்படும் தமிழகத்தின் 6 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் நேற்று இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ அமைப்புடன் மற்றும் சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பு கொண்டுள்ள நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more