வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தனவினால் சுபசாதனை திட்டத்தின் கீழ் 21, 54 மற்றும் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 30 செயற்கை உறுப்புக்கள் இப்பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த செயற்கை உறுப்புக்கள் கண்டி ஊனமுற்றோர் மையத்தின் அனுசரணையில் இராணுவத்தினரது பூரண பங்களிப்புடன் விநியோகிக்கப்பட்டன. வன்னி சிவில் தொடர்பாடல் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஜானக ரத்வத்த, கண்டி ஊனமுற்றோர் மையத்துடன் தொடர்பினை கொண்டு 2 மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க இந்த செயற்கை உறுப்புக்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் கண்டி ஊனமுற்றோர் மையத்தின் நிர்வாக அதிகாரி சாந்த அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் சிவிலியன்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.