Header image alt text

அனைத்து ஊடகங்களும் தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிவுருத்தலுக்கமைய செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ள பெப்ரல் அமைப்பு இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் சட்டத்தில் 31 வது சரத்தின் கீழ் ஆணையொன்றை பிரயோகிக்கும்மாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

பெப்ரல் அமைப்பு இன்று இந்த விடயங்களை குறிப்பிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையிலே மேலும் குறிப்பிடப்படுவதாவது, Read more

வவுனியா மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்யாவிடின் நாளை நண்பகல் 12 மணி முதல் வடமாகாண மின்சார சபை ஊழியர்கள் உள்ளடங்கிய பணி பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளப் போவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் வடமாகாண மின்சார சபை அதிகாரிகள் நாளை காலை 6 மணி முதல் கடமைகளில் இருந்து விலகி குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்… Read more

வவுனியா நகரிலுள்ள இலுப்பையடி பகுதியில் வேகமாக சென்ற டிப்பர் மோதியதில் சிறுமி ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாய் மற்றும் மகளை மோதியுள்ளது. இதன் காரணமாக திருநாவற்குளத்தைச் சேர்ந்த 09 வயதான சுரேஸ் பிரியங்கா என்ற சிறுமியே உயிரிழந்தவராவார். Read more

மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (MCC) அபிவிருத்தி நிதியுதவிக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘அங்கீகாரம் அளிக்கும் அமைச்சரவையின் தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்கிறது. அரசாங்கத்தினது மற்றும் தனியார் துறையினது – அடையாளங் காணப்பட்ட தேவைகளுக்கான நிதியளிப்பின் ஊடாக குறைந்தது 11 மில்லியன் இலங்கையர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த உதவியை இலங்கையே கோரியிருந்தது. Read more

மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் உள்ள மரமொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கள்ளியங்காடு றொஸோரியன் வீதியில் உள்ள அருணோதயம் பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள மரமொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் அப்பகுதியை சேர்ந்த சிவலிங்கம் நிசாந்தன் (21வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். Read more

2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு துன்புறுத்துல்களுக்கு உள்ளான, 78 ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

துன்புறுத்தல்களுக்கு இலக்கான ஊடகவியலாளர்களுக்கான நட்டஈடு வழங்குவது தொடர்பில், நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய, 78 ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டதிட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கை மற்றும் எஞ்சிய சில நாட்களில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் பற்றி ஆராயப்படவுள்ளது. இக்கூட்டத்திற்கு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களும் அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவியை வழங்க கொரியா இணங்கியுள்ளது.

இது தொடர்பிலான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 0.15 வீத வட்டியுடன் முழசநய நுஒiஅடியமெ-இனால் இந்த கடன் வழங்கப்படவுள்ளது. Read more

அமெரிக்க மில்லேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சத்திடப்போவதில்லை என அரசாங்கம் கடிதம் மூலம் வழங்கிய உறுதிமொழிக்கமைய

உடுதும்பர காசியப தேரர் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டத்தினை கைவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ‘நாம் ஸ்ரீ லங்கா’ மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரின் பங்குபற்றுதலில் இந்த மாநாடு நடைபெற்றது. கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர். Read more