அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றையதினம் திறந்து வைக்கப்படவுள்ளது.

கடற்படை மற்றும் வான்படை உள்ளிட்ட முப்படையின் தலைமையகங்களையும் ஒரே இடத்தில் பேணும் நோக்குடன், பெலவத்தை அகுரேங்கொடயில் 77 ஏக்கர் காணியில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. 53.3 மில்லியன் ரூபாய் இதற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிநவீன தொழினுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் நவீன பாதுகாப்பு முறைமையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இராணுவ தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பிரிவுகளில் அமைந்திருப்பதுடன்,

வாடகைக்கு பெறப்பட்டிருந்த கட்டிடங்களுக்காக மாதாந்தம் செலவிடப்பட்டுவந்த 50 மில்லியனுக்கும் அதிக தொகையை இதன் மூலம் மீதப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.