Header image alt text

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தவிர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த கோரிக்கை ஆவணத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. Read more

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் யாழ். பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிரஜா, ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும், புளொட் அமைப்பின் சார்பில் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும், Read more

புத்தளம், எலுவங்குளம் ஊடாக மன்னார் செல்லும் வீதி இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

கலாஓயா ஆறு பெருக்கெடுத்தமையால் புத்தளம், பழைய எலுவங்குளம், சப்பாத்து பாலத்திற்கு மேலாக இரண்டரை அடி உயரத்தில் நீர் மேவிப் பாய்வதாலேயே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் தெரிவித்தார். Read more

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி திருகோணமலை சேருநுவர பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஜோசப் பீட்டர் ரொபின்ஸன் என்பவரின் வீட்டை கடந்த 12 ஆம் திகதி சோதனையிட்ட போது அங்கிருந்த பல்வேறு வகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. Read more

கிளிநொச்சியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரியளவிலான போதைப்பொருள் கைமாற்றப்படப்போவதாக பொலிஸார் மற்றும் மதுவரி திணைக்களத்தினருக்குக் கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. Read more

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளது.

அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு மாத காலம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. Read more

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜகத் டி சில்வாவின் தலைமையிலான ஐந்து பேர் அங்கம் வகிக்கின்றனர். பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை சீட்டுக்களை மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைகளுடன் அறிந்துக்கொள்ள முடியும். Read more

கடந்த வருடத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் துணைத் தலைவர் கூறியுள்ளார். அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளனர் என்று தெரிவித்த அவர், பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு மாத காலம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. Read more

வவுனியாவில் இன்று இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையால் மக்கள் பதற்றமான நிலையில் காணப்படுகின்றனர்.

இன்று காலை வவுனியா ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற பகுதிகளில் வீதியை மறித்து பரல்கள் அடுக்கி தீவிரமாக மக்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வவுனியா தேவாலயங்களிலும் இராணுவத்தினரும், பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Read more